டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி ( nz vs afg ) அபார வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் சுமார் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன .
இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின .
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக கடினமான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
நிதானமாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதல் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற நடு மற்றும் பின் வரிசை வீரர்களால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.இதனால் நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று உலகக்கோப்பை ( nz vs afg ) தொடரில் கெத்து காட்டியுள்ளது .