கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு என்று ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (2023) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.இதில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதினர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களுக்கு 284 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது.
தொடர்ந்து, இங்கிலாந்தின் மிடில் ஆர்டர், கீழ் வரிசை பேட்டர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஹாரி ப்ரூக் மட்டும் அரைசதம் அடித்து அவுட்டானார். இருப்பினும், டெயில்டெண்டர்களும் சிறிது ஆறுதல் அளித்தனர்.
9ஆவது விக்கெட்டுக்கு 29 ரன்களையும், கடைசி விக்கெட்டுக்கு 17 ரன்களை எடுத்தனர். இதன்மூலம், ஆப்கானிஸ்தானின் சுழலில் சிக்கி இங்கிலாந்து 40.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில், ஆப்கான் வெற்றி பெற்றதால் சிறுவன் ஆனந்த கண்ணீருடன் ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மான் தட்டி கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இது குறித்து ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில்..
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றபோது, என்னை கட்டியணைத்தது ஒரு ஆப்கானிய சிறுவன் அல்ல, ஒரு இந்தியன். எங்களின் வெற்றிக்காக அவன் மிகவும் சந்தோஷப்பட்டான். கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. நீங்கள் அளித்த அன்பிற்கு நன்றி!” ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானை சிறுவன் கட்டியணைத்து அழுத வீடியோ வைரலான நிலையில் X-ல் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.