திருவள்ளூரில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அண்மையில் திருவள்ளூரில் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகளின் மரண சம்பவங்கள் குறித்த விசாரணையை cbcid போலீசார் மேற்கொண்டு வரும் நிலையில், திருவள்ளூரில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் செண்பகா எனும் தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் விடுதி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த விடுதியில் தங்கி படித்தது வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் மரணத்திற்கான காரணம் தற்போது வரை தெரியாத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அவரது அறையில் இருந்த அவருடைய செல்போன் மற்றும் அவரது உடைமைகளை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.