அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் அமைந்துள்ள அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
Also Read : நீதிபதி சந்திர சூட்டின் பேச்சு வருத்தமளிக்கிறது – திருமாவளவன்
பல மணி நேரம் நடைபெற்ற வந்த சோதனை நேற்றுடன் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக கட்டுமான நிறுவனத்திடம் ரூ. 28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.