போதைப்பொருட்களை திமுக அரசு கட்டுப்படுத்து தவறி விட்டதாக கூறி தமிழ்நாடு முழுவதும் (Human chain proetst) அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் போதைப்பொருட்களையும் அதனை கடுத்துபவர்களையும் ஒழிக்காமல் இருக்கும் திமுக அரசை கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த இருப்பதாக அதிமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில் சொன்னது சொன்னபடி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தில் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.
போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத முதல்வர் தார்மீக பொறுப்பேற்று (Human chain proetst) பதவி விலக வேண்டும் என்றும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி போர் குரல் எழுப்பியுள்ளார்.