அரக்கோணம் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது, ஜெகத்ரட்சகனையும், குடுகுடுப்பைகாரரையும் ( jegathratchagan ) இணைத்து அதிமுக வேட்பாளர் தடாலடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதிக்கட்டமாக சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைவர்களின் பிரச்சாரத்திலும் கோடை வெயிலை விட அனல் தகிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் A.L. விஜயன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவியும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். கிராமப் பகுதிகளில் மாட்டு வண்டியில் ஏறி வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர்களுக்கு, பெண்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும், சாலை அணிவித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Also Read : https://itamiltv.com/let-dharma-teach-ops-a-good-lesson-kp-munusamy/
பிரசாரத்தின் போது, பேசிய எதிர்க்கட்சித் துணை கொறடாவும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி குடுகுடுப்பைக்காரர் கூட வருடத்திற்கு ஒருமுறை வருவார். ஆனால் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஜெயித்தால் 5 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வருவார்.ஸ்டாலின் செய்த ஒரே ஒரு சாதனை பெண்களுக்கு பால் விலை ஏற்றியது. ஆண்களுக்கு சரக்கு விலை ஏற்றியது.
வருமான வரியில் இருந்து பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார் ஜெகத்ரட்சகன். கடந்த 15 வருடங்களாக MP யாக இருந்த திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ( jegathratchagan ) எந்த நலத்திட்டங்களையும இந்த தொகுதிக்கு கொண்டு வந்ததில்லை. மாற்றம் நிகழ அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு தாருங்கள் எனக்கூறி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்….