Journalists Attack | சென்னை நங்கநல்லூரில் மளிகை கடையை சுரை ஆடிய அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள பாலாஜிநகர்,வால்டஸ் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்.இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது கடையின் அருகில் குடிபோதையில் விழுந்துகிடந்த உள்ளகரத்தை சேர்ந்த அதிமுக வர்த்தக அணி செயலாளர் தனசேகரன்னுக்கு தண்ணீர் கொடுத்து உதவியுள்ளார்.
மேலும்,குடிபோதையில் தனது செல்போனை எங்கே விட்டோம் என்பதை கூட அறியாத நிலையில் இருந்துள்ளார் தனசேகரன்.
தள்ளாடிய நிலையில் அந்த இடத்தில் இருந்து தனசேகரன் சென்றுள்ளார்.
அதை தொடர்ந்து,சிறிது நேரம் கழித்து போதை தெளிந்தவுடன் தனது செல்போனை தேடிய அவர்,தனது போனை மளிகை கடையின் உரிமையாளர் சக்திவேல் தான் திருடிவிட்டதாக நினைத்து,
10 பேர் கொண்ட கும்பலுடன் வந்து மளிகை கடையில் தகராறில் ஈடுபட்டுனர்.மேலும்,தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கடையை சுரை ஆடிய அந்த கும்பல்,
பிரச்னையை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கியுள்ளனர்.இவை அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: DMK Election Manifesto | சென்னை மக்களிடம் இன்று கருத்துக் கேட்பு.!
தொடர்ந்து,அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 5பேரை போலீசார் கைது(Journalists Attack) செய்துள்ளனர்.அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை பத்திரிக்கையாளர்கள் வீடியோ எடுக்க முயன்றுள்ளனர் அந்த நேரத்தில் அதிமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை தாக்கி செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனை அடுத்து பரங்கிமலை காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.