மதுரை மாநகராட்சியின் 5ஆவது மாமன்ற கூட்டம் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது மாநகராட்சி ஆணையர் சிம்ரம் ஜித் பங்கேற்றார்,
திமுக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் வார்டுகளில் உள்ள பிரதான பிரச்சினைகளை மேயர் முன்பும் எடுத்து வைத்தனர்
கடந்த ஐந்து மாதங்களில் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளான பாதாளச் சாக்கடை குடிநீர் சாலை மின் விளக்கு போன்ற எந்தத் திட்டமும் ஒழுங்குமுறையில் செயல்படுத்தவில்லை என்று கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்,
மேலும் மாமன்ற அரையில் பேசுவதற்கு அனுமதி வழங்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்..