நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு (AIADMK Office) அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு விரைவில் நேர்காணல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர்
அதிமுக தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 – வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி
அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட அந்த விம்மப்பங்களை மீண்டும் தலைமைக் கழகத்தில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விருப்ப மனு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1 முதல் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது .
இந்நிலையில் விருப்ப மனு சமர்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிந்த நிலையில் அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 10, 11 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது .
.
10ம் தேதி 20 தொகுதிகளுக்கும் 11ம் தேதி 20 தொகுதிகளுக்கும் (AIADMK Office) நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.