வைக்க கூடாத இடத்தில் வைத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான பெண் ஊழியர் சுரபி கதுன் ( Airline employee ) விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டுவர கூடாது என்றும் விலையுயர்ந்த பொருட்களுக்கு உரிய வரி செலுத்தி கொண்டு வரவேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் பலர் தங்கம் , வெள்ளை , உள்பட பல பொருட்களை தினம்தோறும் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கண்ணூர் வந்த விமானத்தில், 960 கிராம் தங்கக் கட்டிகளைத் தனது ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கேபின் ஊழியர் சுரபி கதுன் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read : வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
கண்ணூர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரிடம் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் மறைத்து வைத்திருந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்தனர் .
இதுமட்டுமின்றி சுரபி பல காலங்களாகத் தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் ( Airline employee ) வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் தெரியவந்துள்ளது.