அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்குடன் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது (latest update).
அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்த நிலையில், அந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
அதையடுத்து, அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்திலிருந்து விலக்கப்பட்டார்.
அதன் பிறகு, மகிழ்திருமேனி அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், அதை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 62 ஆவது படத்தின் தலைப்பை ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியிடுகின்றனர்.
தற்போது, தன்னுடைய உலக பைக் பயணத்திற்காக நடிகர் அஜித் நேபாளில் உள்ள நிலையிலும், அவர் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 62 ஆவது படத்தின் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதனால், அஜித் 62 படத்தின் தலைப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் அவர் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது எனவும், லைகா நிறுவனம் அந்த அறிவிப்பை (latest update) வெளியிட உள்ளதாகவும், அதற்கான நேரம் நாளை காலை முடிவாகும் எனவும், படக் குழுவினர் தரப்பில் கூறியுள்ளனர்.