கோலாகலமாக இன்று நடைபெற்ற (Alanganallur jallikattu ) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்பசாமி கார்த்தி என்ற பட்டதாரி இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக தொடங்கியது . இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளிக்கும் இப்போட்டிக்கு 1200 காளைகளும், 700 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர் .
போட்டிக்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது.
இதையடுத்து மாடு பிடி வீரர்களுக்கு ருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,மூர்த்தி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர்.
இந்த மாபெரும் போட்டியில் வெற்றி பெறும் காளையின் உரிமையாளர், காளையருக்கு தலா ஓர் கார் பரிசாக வழங்கப்பட்டது .
காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், டிவி உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டது .
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் 8 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்ற இப்போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 24 மாடுபிடி வீரர்கள், 9 மாடு உரிமையாளர்கள், 15 பார்வையாளர்கள், 3 காவலர்கள் உட்பட 52 பேர் காயமடைந்துள்ளனர்
காயமடைந்த வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது .
மேலும் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்ததால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
இதற்காக வாடிவாசல் அருகே பல தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர் . மதுரை மாநகர காவல்துறை சார்பாக 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர் .
மாடுகளின் கொம்புகளைப் பிடிப்பதோ, அவற்றின் கால்களைப் பின்னுவதோ, மாட்டின் வாலை பிடிப்பதோ கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அலங்காநல்லூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கண்டு ரசிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆங்காங்கே பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டது .
போட்டிகளில் பங்கேற்று காளைகளைப் பிடிக்கும் வீரருக்கும் பிடிபடாமல் செல்லும் காளையின் உரிமையாளருக்கும் பீரோ, கட்டில் , அண்டா, தங்க நாணயம், மின்விசிறி, கேஸ் ஸ்டவ், சைக்கிள், உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்படும் காரை கருப்பாயூரணி கார்த்தி என்ற இளைஞர் வென்றுள்ளார்.
இதேபோல் இந்த ஜல்லிக்கட்டில் (Alanganallur jallikattu ) 810 காளைகள் களம் கண்ட நிலையில், முதலிடம் பிடித்த மதுரை வெள்ளைக்காளி செளந்தர் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.