திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கியது இந்த பசுமை திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இயற்கை விவசாய முறையில் காய்கறித் தோட்டம் அமைத்தல் விவசாயத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்வது போன்றவற்றிற்கான போன்றவற்றிற்கான இந்த பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்படுகிறது.
மேலும் சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் பயிர் செய்து அனுப்படும்.மேலும் தொழிற் கல்வி உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளிலும அதற்கு தகுந்தாற் போல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே கூட்டத் தொடரில் முதலமைச்சர் கூறி இருக்கிறார்.
அதன் அடிப்படையில் தமிழ் முழுவதும் அனைத்து பள்ளிகளும் இந்த திட்டம் கொண்டு வரப்படும்.பொது முதல் முறையாக கலைஞர் பிறந்த மாவட்டமான திருவாரூரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1540 பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் மூலம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 3030 பள்ளிகள் பழுதடைந்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 1747 வகுப்பறைகள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளது.விரைவில் அதற்கான கட்டுமானப் பணிகளை ஜனவரி 27ஆம் தேதி கேளம்பாக்கத்தில் முதல்வர் தொடங்கவிருக்கிறார்.
முதல் கட்டமாக 240 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளில் எங்கு பள்ளிகளில் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் மாணவ மாணவிகள் பயில்கிறார்களோ அதற்கு முன்னுரிமை அளித்து அந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.
கடந்த வருடத்தில் மட்டும் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மாணவ மனைவிகள் பள்ளியில் இருந்து நின்று உள்ளார்கள்.அவர்களை திரும்ப பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதேபோன்று எந்த மாணவன் பள்ளியில் இருந்து நின்று விடுவான் என்பதை நடவடிக்கை மூலம் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கடந்த இரண்டு வருடத்தில் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் மீண்டும் சேர்ந்துள்ளனர்.