குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி நடிகர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்ட கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் இன்று.
தற்போது சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் மையம் கொண்டிருக்கும் இவருக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,
கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி – மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
நலம் சூழ வாழிய பல்லாண்டு! என தெரிவித்துள்ளார்.
https://x.com/mkstalin/status/1721729092394074409?s=20
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனைச் சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற எனது வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.
https://x.com/draramadoss/status/1721748379326366141?s=20
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,
அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ஒரு சிறந்த கலைஞராகவும், சமூக மற்றும் அரசியல் ஆர்வலராகவும், நீங்கள் மக்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளீர்கள். உங்கள் முயற்சியின் அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வருடங்கள் அமைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
https://x.com/pinarayivijayan/status/1721729323718344936?s=20
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,
திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் – சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை என்று தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,
நாம் வாழும் காலத்தின்
கர்வ காரணங்களுள் ஒன்று
கலைஞானி கமல்ஹாசன்
இத்துணை நீண்ட திரைவாழ்வு
அத்துணை பேர்க்கும் வாய்க்காது
வாழ்வு கலை இரண்டிலும்
பழையன கழித்துப்
புதியன புகுத்தும்
அந்தண மறவரவர்
எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு
இனி என்ன வேண்டும்?
உடையாத உடல் வேண்டும்;
சரியாத மனம் வேண்டும்
வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்.. என தெரிவித்துள்ளார்.