தஞ்சாவூர் அருகே 22 கோடி மதிப்பிலான 6 தொன்மை வாய்ந்த சாமி சிலைகளை தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று பேட்ரோல் போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது சந்தேகத்திற்கிடமான வாகனத்தை பிடித்து சோதனை நடத்தியபோது சுமார் 22 கோடி மதிப்புடைய 6 தொன்மை வாய்ந்த பழங்கால ஐம்பொன் சாமி சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
இதையடுத்து பழங்கால சிலைகளை கடத்தி வந்த ராஜேஷ் கண்ணா, லட்சுமணன், திருமுருகன் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மேற்படி சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்பது குறித்தும், இதில் வேறு நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.