வெம்பக்கோட்டையில் பழங்கால சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தமிழக அரசின் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் . அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது .
இதுவரை வெம்பக்கோட்டையில் இருந்து ஏரளமான பழங்கால பொருட்கள் கிடைக்கப்பெற்று அருங்காட்சியத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் வெம்பக்கோட்டையில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது கூம்பு வடிவம் மற்றும் நீல் உருண்டை வடிவ சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் வெம்பக்கோட்டைக்கும் வட மாநிலங்களுக்குமான வணிக தொடர்பை உறுதிப்படுத்துபதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.