ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதாக ஆந்திர முதல்-அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆந்திர முதல்-அமைச்சர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“தமிழ்நாடு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சாய் தேஜா அவர்கள் முப்படைத்தளபதி பிபின் ராவத் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர்” என்று தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts