இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய புரட்சியாளர் டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் 206 அடி உயர சிலை, ஆந்திரா (Andhra) விஜயவாடாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில் இன்று திறக்கப்பட உள்ளது.
இந்த சிலையை ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது.
இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.
இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார்.
விழாவுக்கு மக்களை அழைத்த ஆந்திரப் பிரதேச முதல்வர்
இந்தச் சிலையின் திறப்பு விழாவுக்கு மக்களை அழைத்த ஆந்திரப் பிரதேச (Andhra) முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அனைவரும் தானாக முன்வந்து கலந்துகொள்ளுமாறு கோரினார்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/jallikattu-mkstalin-madurai-inaugurate-kalaingercentenary-climbingcenter24th/
அம்பேத்கரின் இந்தச் சிலை ‘சமூக நீதியின் சிலை’ என்று குறிப்பிட்ண அவர், இது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே சிறப்பு சேர்ப்பதாகவும் கூறினார்.
நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில், குறிப்பாக பெண்களின் வரலாற்றில் அம்பேத்கர் செல்வாக்கு செலுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
அம்பத்கர் குறித்த சிறிய வரலாறு
இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கரின் இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இவர் 1891 ஆம் ஆண்டு பிறந்தார்.
அம்பேத்கர் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
https://x.com/ITamilTVNews/status/1747849018481463322?s=20
இவர் இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார். இந்திய நாட்டின் சட்ட புத்தகத்தை உருவாக்கியவர் என்ற பெருமையும் பெற்றவர்.