பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கி பாஜக தலைவர் அண்ணாமலை(Annamalai) அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 2022 நவம்பர் 22 ஆம் தேதி பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாநில பொதுச்செயலாளராக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவரான டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் நிர்வாகியை ஆபாச வார்த்தைகளால் பேசி செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெண் நிர்வாகியை மிரட்டிய சூர்யா சிவாவை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதித்தும் 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்துவந்த சூர்யாஅதன் பிறகு கடந்த டிசம்பர் 6 2022 ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில்..
`அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்குக் கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜக-வுக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டுமென்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால், கடந்தகால பாஜக-வைப்போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக-வுடனான உறவை நான் முடித்துக்கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி’ எனக் குறிப்பிட்டு பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் ,வரும் நவம்பர் 5 ஆம் தேதி 2023 அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கி பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.தற்பொழுது இருந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.