தமிழகத்தில் திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் சென்னை மண்டலம் மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ” பேரறிஞர் அண்ணா குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். மேலும் திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. அண்ணா குறித்து அண்ணாமலைக்கு என்ன தெரியும்?இந்த தைரியம் அவருக்கு எப்படி வந்தது?. அவரது பெயரைச் சொல்லவே அண்ணாமலைக்குத் தகுதி இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் நாம் அனைவரும் இன்று சமமாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணா தான். கடைநிலையில் இருப்பவர்கள் கூட இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் இதற்குக் பேரறிஞர் அண்ணாதான் காரணம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று ஒபன்னீர்செல்வத்தை சூசகமாக தெரிவித்தார் .