Bjp Election Manifesto -நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்க உள்ள நிலையில், பாஜக 38 குழுக்களை அமைத்துள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ,ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை பாஜக இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க:DMK Election Manifesto Committee | பொதுமக்களிடம் கருத்து கேட்க இன்று சுற்றுப்பயணம்..!
அந்த வகையில் தமிழ்நாட்டில் 25 இடங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜக மாநில தலைமை அறிவித்து வருகிறது.
முன்னதாக தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதி பங்கீட்டு குழு, ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்தது.
அதனை தொடர்ந்து இன்று முதல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் பணியை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:Gutka Seize-”7 நாளில் 160 கிலோ குட்கா.. 36 பேர் கைது..”அதிரடி ஆக்ஷனில் தமிழக போலீஸ்!!
ஆனால் தமிழகத்தில் பாஜக சார்பாக தேர்தல் பணிகள் தொடங்காமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ,தற்போது பாஜக சார்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்க ஹெச்.ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1754402596742152586?s=20
இந்த குழுவில் கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதே போல பா.ஜ.க. தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழுவும்(Bjp Election Manifesto) உரையை அச்சிட தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சாரக்குழு, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரச்சாரக் குழு என 38 குழுக்களை அமைத்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.