நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விளக்கம் தரப்படுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை(annamalai) ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லல் குழும விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை வங்கிக்கணக்கில் இருந்த சுமார் 34 லட்சம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை(annamalai) கேள்வி எழுப்பி உள்ளார்.அதில்,
”வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம்.
முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.
முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது.
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?
இதற்காவது பதில் வருமா?”என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.