திமுக கட்சிகாரர்களை கிராமத்திற்கு அனுப்பி உங்கள் வீட்டு ஆள் வெளியே வர வேண்டும் என்றால் எங்களுடன் வந்து MLA மற்றும் அமைச்சர் வேலுவிடம் முறையிடுங்கள் என்று தெரிவித்ததாக அறப்போர் இயக்க ஜெயராம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய முன்தினமே தமிழ்நாடு அரசு 7 விவசாயிகள் மீதும் குண்டாஸை திரும்ப பெறும் முடிவை எடுத்து இருந்ததாக தெரிகிறது. ஆனால் நேற்றைய தினம் அமைச்சர் எ வ வேலு ஒரு அருவருப்பான நாடகத்தை அரங்கேற்றினார். திமுக கட்சிகாரர்களை கிராமத்திற்கு அனுப்பி உங்கள் வீட்டு ஆள் வெளியே வர வேண்டும் என்றால் எங்களுடன் வந்து MLA மற்றும் அமைச்சர் வேலுவிடம் முறையிடுங்கள். நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் வீட்டு ஆள் 1 வருடத்திற்கு வெளியே வர முடியாது என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
கடுமையான வார்த்தைகளும் பிரயோகித்து உள்ளனர். அமைச்சர் வேலு வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்வார் என்று அவர்களை வண்டியில் ஏற்றி முதலில் செய்யாறு MLA மற்றும் பிறகு அமைச்சர் எ.வ.வேலுவிடம் அழைத்து சென்றனர். 7 பேரையும் விடுதலை செய்வதாக கூறி அங்கு அவர்களிடம் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த கட்டிதத்தில் கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. அருள் தூண்டுதலில் தான் செய்து விட்டனர் என்று அமைச்சர் ஒரு பத்திரிக்கை சந்திப்பும் நடத்துகிறார்.
திருவண்ணாமலை திமுக பொறுப்பு அமைச்சரான தனக்கு விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டதே பத்திரிகை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று நாடகம் ஆடுகிறார். அருள் கிருஷ்ணகிரி திருவண்ணமலை எல்லையில் வீடு உள்ளவர். அவர் விவசாய நிலம் திருவண்ணாமலை செங்கத்தில் தான் உள்ளது. ஏற்கனவே அருள் நிலம் 8 வழி சாலையில் பாதிக்கப்படுவதால், அதை எதிர்த்ததில் எ.வ.வேலு அவர் மீது வன்மம் கொண்டதாக சொல்லப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் 8 வழி சாலையில் விவசாயிகளுக்கு குரல் கொடுத்து இருந்தாலும், எ.வ.வேலு அதிமுக நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தார், வருகிறார்.
விவசாயிகளை வெளியே கொண்டு வர தான் காரணம் என்பது போல நாடகம் ஆடவும் இதை பயன்படுத்தி அருளை பலிகடா ஆக்க அமைச்சர் வேலு போட்ட மிக கேவலமான நாடகம் இது. மேல்மா பகுதியில் உள்ள சில விவசாயிகள் 8 வழி சாலை எதிர்ப்பில் அருளை தெரிந்து கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே மேல்மா எதிர்ப்பு ஆரம்பித்தபொழுது திமுக அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அச்சுறுத்தல் இருந்தது. எனவே ஆதரவு தெரிவிக்க அருளை அழைத்ததன் பெயரில் தான் அருள் அங்கு சென்று அவர்களுடன் போராடி வருவதாக குண்டாசில் அடைக்கப்பட்ட விவசாயி மாசிலாமணியின் தங்கை பேசுவதை இங்கே காணலாம். செங்கம் விவசாயி மேல்மா பகுதிக்கு சென்று ஆதரவு தெரிவிக்க கூடாது என்று எ.வ வேலு சொல்வது அபத்தமானது. அதற்கு குண்டாஸ் போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படி என்றால் 8 வழி சாலை எதிர்ப்புக்கு விவசாயிகளுக்கு குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் மீது எ வ வேலு குண்டாஸ் போடுவாரா ?
தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் நேற்றைய முன்தினம் எடுத்த முடிவின் படி 7 பெயரையும் குண்டாசில் இருந்து விடுவித்து இருக்க வேண்டும். அரசு தன் தவறை உணர்ந்ததர்காக மக்களும் பாராட்டி இருப்பார்கள். மாறாக அமைச்சர் வேலுவின் பேச்சை கேட்டு ஒரு கொடூரமான நாடகத்தை நேற்று அரங்கேற்றி விவசாயி குடும்பங்கள் இடம் இருந்து மன்னிப்பு கடிதம் வாங்கி விவசாயி அருளை குண்டாசில் உள்ளே வைத்து சித்திரவதை செய்ய அமைச்சர் வேலுவும் தமிழ்நாடு அரசும் செய்யும் இந்த செயல்கள் அருவருப்பானது.
https://x.com/JayaramArappor/status/1725727925516091464?s=20
தமிழ்நாடு அரசு உடனே விவசாயி அருள் ஆறுமுகத்தின் குண்டாஸை திரும்ப பெற வேண்டும். அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும். வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். விவசாயிகளுடன் ஜனநாயக முறையில் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.