தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலின் போது, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம், 70-வயதை கடந்த ஒய்வூதியதாரர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம், மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது.
ராமநாதபுரம் திமுக நிர்வாகி டிஸ்மிஸ்.. ரூ.70 கோடி போதைப்பொருள் கடத்தலில் சிக்கியதால் உத்தரவு இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தக் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்குக்கூட அரசு தயாராக இல்லை.
இதையும் படிங்க : ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடுக : அன்புமணி ராமதாஸ்!!
இந்த நிலையில், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெறுதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் சென்னை, டி.பி.ஐ. வளாகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்று சொல்லும் தி.மு.க., உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆசிரியர்களின் குரல்வளையை நசுக்குவது எவ்விதத்தில் நியாயம்?
மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்பும் உரிமை ஒரு மாநில அரசுக்கு இருக்கின்றபோது, செயல்படாத, வாக்குறுதியை நிறைவேற்றாத மாநில அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் உரிமை, அறப்போராட்டம் மேற்கொள்ளும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடாதா? அறப்போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவது என்பது அறநெறியை மீறும் செயள, ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.
முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 95 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறுகிறார். உண்மை நிலை என்னவென்றால், பெரும்பாலான முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
மாதம் ஒரு முறை மின் கட்டணம், பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, ரேஷனில் கூடுதல் சர்க்கரை, கூடுதல் உளுத்தம் பருப்பு, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம்,
மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு, 100 ரூபாய் காஸ் மானியம், மூன்றரை இலட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புதல் என பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.