ICE WATER : உடலை ஹைட்ரேட்டடாக (hydrate) வைத்திருப்பது நிரூபிக்கப்பட்ட பல நன்மைகளைத் தரும்.
இது ஒருவரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான நம்பகமான ஆதாரம்.
தேசிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அகாடமியின் பரிந்துரைப்படி, 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு நாளைக்கு 3.7 லிட்டர் தண்ணீரும், 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 2.7 லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும்.
வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கோடைகால வெப்பத்தை சமாளிக்க நம்மில் பலரும் குளிர்ந்த நீரைக் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
ஆனால் குளிர்ந்த நீரைக் குடிப்பது உங்களுக்கு நல்லதா அல்லது கெட்டதா? என்று எப்போதாவது யோசித்தது உண்டா…
நமது ஆயுர்வேத நூல்கள், மருத்துவ குறிப்புகள் குளிர்ந்த நீரை விடச் சூடான அல்லது அறை வெப்பநிலை நீரை குடிப்பதை அறிவுறுத்துகின்றன.
அப்படி குளிர்ந்த நீரைக் (ICE WATER) குடிப்பதால் என்னதான் ஆகும் என்பதை தெரிந்து கொள்வோம்!
முதலில், குளிர்ந்த நீரைக் குடிப்பது சில நேரங்களில் செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
குளிர்ந்த நீரை நம் எடுத்துக்கொள்ளும்போது நமது இரத்த நாளங்களைச் சுருங்குகிறது, இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இதன் விளைவாக ப்ளோட்டிங், க்ராம்ப்பிங் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
குளிர்ந்த நீரைக் குடிப்பது சளி உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது,

குளிர்ந்த நீர் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்வதால், அப்பகுதியில் இரத்த ஓட்டம் குறைகிறது.
இதையும் படிங்க : சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் “வேல்” வைத்து பூஜை!
இதனால் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறன் குறைகிறது. மேலும் இதனால் குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படலாம்.
குளிர்ந்த நீரை பருகுவதால் உணவுக்குழாயில் உள்ள நரம்புகளைச் சேதப்படுத்துவத்தல், அசலேசியா (Achalasia) எனும் உணவுக்குழாயை பாதிக்கும் ஒரு அரிய மருத்துவ நிலையின் தொடக்கத்தைத் தூண்டும். இந்த நிலை உணவு மற்றும் திரவங்கள் செல்வதை கடினமாக்குகிறது.
குறிப்பாகக் குளிர்ந்த நீர் உங்கள் பற்களுக்குத் தீங்கு விளைவிக்கும். இதனால் மிகவும் குளிரான ஒன்றை எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் பல் எனாமெலை (enamel) பலவீனமடையச் செய்து, காலப்போக்கில் உணர்திறன் மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கும்.
இந்தப் பிரச்னைகளைத் தாண்டிக் குளிர்ந்த நீரைக் குடிப்பதால் சில நன்மைகளும் உள்ளன.
உடற்பயிற்சியின்போது குளிர்ந்த நீரைக் குடிப்பதால் உடல் அதிக வெப்பமடைவதைத் தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.
உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் குடிப்பது உங்கள் உடலுக்கு நம்பமுடியாத புத்துணர்ச்சியையும் நன்மையையும் அளிக்கும்.
குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது, உடலின் இரத்த நாளங்களை அது சுருங்க செய்கிறது. இதனால் பாபகுதிக்குச் செல்லும்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. அதன் மூலம் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது.