Rahul Gandhi’s helicopter check : நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று மக்களை சந்திக்கிறார்.
கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்காக செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள மக்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இதற்காக மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வந்த ராகுல் காந்தி பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு மைதானத்தில் தரையிறங்குகினார்.
இதையும் படிங்க : அண்ணாமலை வெற்றி என்பது மாயை – போட்டுத்தாக்கும் எஸ்.பி.வேலுமணி
அப்போது நீலகிரியில் ராகுல் காந்தி வந்து இறங்கிய ஹெலிகாப்டர் தளத்துக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வந்தனர்.
மேலும் அவர்கள் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 15 நிமிடங்களாக பறக்கும் படை அதிகாரிகளால் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் முற்றிலுமாக சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சோதனைக்கு பின்னர் பணம், நகை உள்பட எந்த பொருளும் ஹெலிகாப்டரில் இல்லை என உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து ராகுல் காந்தி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து நேரடியாக செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் சென்றார்.
இதனை தொடர்ந்து அவர் அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திரப்பிற்கு பிறகு வயநாடு புறப்பட்டு செல்லும் ராகுல் காந்தி சுல்தான் பத்தேரி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.
அங்கு அவருக்கு கட்சி சார்பில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன Rahul Gandhi’s helicopter check .
இதையும் படிங்க : திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கு?-அண்ணாமலை