டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லியின் துணை முதல்வராக செயல்பட்ட மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை திங்கள்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில்,டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதற்க்கு கடிதம் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் ,பாஜகவின் வலியுறுத்தலின்படி 4 மாநிலத் தேர்தலில் தான் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் தனக்காக சம்மனை அமலாக்கத் துறை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.