இந்தியாவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தனது தனித்துவமான அரசியல் ஆளுமையை மேற்குவங்காளத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக மம்தா இருந்து வருகிறார் .இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மம்தாவின் தனிப்பட்ட வீடு தெற்கு கொல்கத்தாவின் கலிகட் பகுதியில் 34பி ஹரிஸ்சடர்ஜி என்ற முகவரியில் உள்ளது. இந்த வீட்டிற்கு பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் நுழைந்த மர்ம நபர் இரவு முழுவதும் பதுங்கி இருந்துள்ளார்.
மேலும் காலையில் வழக்கம் போல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த மர்ம நபர் சிக்கியுள்ளார். அவரை கைது செய்து விசாரித்த போது அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு அமைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.