ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. நேற்று நடைபெற்ற கடைசி லீக்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்ததால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி இழந்தது. வாய்ப்பை இழந்தது. இந்தநிலையில் இந்திய அணியின் அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானை சந்திந்தது.
அதில் ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது இந்தியா. இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலககோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.