ஆசிய விளையாட்டுப் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நேற்று தொடங்கிய நிலையில், வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் குவித்தது.
118 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 46 ரன்கள் எடுத்ததை அடுத்து இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 117/7 என்ற இலக்கை நிர்ணயித்தது.
இதற்கிடையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்கள் எடுத்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
தடை காரணமாக ஹர்மன்ப்ரீத் கவுர் ஓரிரு ஆட்டங்களைத் தவறவிட்டதால், இந்தியாவின் தங்கப் பதக்கத்திற்கான பாதையில் மந்தனா முக்கியப் பங்காற்றினார்.