தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து பி அவருக்கு அணைத்து வித போட்டிகளிலும் இருந்து கலந்து கொள்ள 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த திருச்சியை அடுத்த குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி .24 வயதான இவர் அலமாட்டியில் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 23.21 நொடிகளில் கடந்து சாதனை புரிந்தார்.அவருடன் அந்த போட்டியில் ஹீமா தாஸ், டுட்டி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தி இந்தியாவின் வேகமான வீராங்கனை சாதனை பெற்றார்.
இந்த நிலையில் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க தயாராகி வந்த நிலையில் மே மாதம், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தடை செய்துள்ள அனபோலிக் என்ற ஊக்கமருந்து உட்கொண்டதாக சோதனை முடிவுகள் வெளியாகின. இதனை தொடர்ந்து அவர் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது அனைத்துவித போட்டிகளிலும் கலந்து கொள்ள மூன்றாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கமான ஊக்கமருந்து சோதனை தொவில் அடைந்தவர்களுக்கு தடகள உண்மை தன்மை அமைப்பு நான்கு ஆண்டுகள் விதிமுறைகளுக்கு கீழ் தடைவிதிக்கும்.மேலும் விசாரணையில் தனலட்சுமி தான் ஊக்கமருந்தை உட்கொண்டதாலும் மேலும் அதை ஒப்பு கொண்டதாலும் அவருக்கு 3 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மே 1ம் தேதி விளையாட்டில் அவர் பெற்ற பதக்கங்கள் அனைத்தும் திரும்பி பெறப்படும் என உண்மை தன்மை அமைப்பு தெரிவித்துள்ளது.