மிக்ஜாம்’ புயலால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்(David Warner) பதிவிட்டு இருப்பது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் சென்னையில் உருவான மிக்ஜாம்’ புயல் நிலைகொண்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து ஆக்ரோஷத்தை காட்ட தொடங்கியது. சென்னைக்கு 100 மீட்டர் தொலைவில் இருந்த போதே கனமழை மற்றும் சூறைக்காற்று நேற்று இரவு வரை தொடர்ந்தது.
கடந்த இரண்டு நாட்களாக கூட்டிட்டு கனமழையால் சென்னை நகர மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி சென்னை நகரமே வெள்ளகாடாய் காட்சியளிக்கிறது.
மேலும் மிக்ஜாம் புயலால் கனமழை வெளுத்து ஓய்ந்த நிலையிலும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது.மழை வெள்ளத்திற்கு இதுவரை எட்டு பேர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சென்னை புயல் பாதிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களை தற்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.
”தேவைப்பட்டால் அனைவரும் உயர்வான இடத்தில் இருங்கள்..”நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால் நிவாரண பணிகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும். அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளை செய்ய ஒன்றுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.