தமிழக சுகாதாரத் துறையின்(health department) சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த 2021 முதல் தற்போது வரை பெற்ற விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதிநாட்டிலேயே அதிகபட்சமாக 22 தொற்றா நோய்களுக்கான 29,88,110 பரிசோதனைகள், அதிக எண்ணிக்கையிலான 85,514 ஆரோக்கிய அமர்வுகளை நடத்தியது ஆகியவற்றுக்கு 2 விருதுகளை தமிழகம் பெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த 2022-ல்டெல்லியில் நடைபெற்ற உலக காசநோய் தினத்தில் காசநோய் பாதிப்பை 40 சதவீதம் குறைத்த நீலகிரி மாவட்டத்துக்கு வெள்ளிப்பதக்கம், 20 சதவீதம் குறைத்த விழுப்புரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நாமக்கல், நாகப்பட்டினம், கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு வெண்கல பதக்கமும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
இதேபோல் பல அளவீடுகளில் தமிழகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, துறையின் செயலர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் இருந்தனர்.