இந்தியாவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகின்ற தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தற்பொழுது ஜனாதிபதியாக இருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி இந்த தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சிநேகாவும் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து இருவரும் மாநிலம்தோறும் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளைத் தமிழக சட்டப்பேரவை செயலகம் முழு வீச்சில் செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த மாதம் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு பேட்டி மாநிலங்கள் வாரியாக கொண்டுசெல்லப்படவுள்ளது.
இந்த நிலையில், டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும் வாக்குப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.