விமானத்தில் கணவன் மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில்(delhi) தாய்லாந்து விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லுஃப்தான்சா விமானம்-எண் LH772, முனிச்சிலிருந்து(ஜெர்மனி) பாங்காக்(தாய்லாந்து) நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் பயணித்த ஒரு ஜெர்மனியருக்கும் அவரது தாய்லாந்து மனைவிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அவரது மனைவி, தன் கணவரின் நடத்தையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விமானியின் உதவியை நாடினார்.
இதனையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை எச்சரித்த விமானிகள், முதலில் பாகிஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரினர். ஆனால் அது மறுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க விமானிகள் அனுமதி கேட்டனர்.