T20 உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு அரை இறுதி சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு சற்று இருக்கும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்கின.
டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் பேட் செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீரர் சர்க்கார் 2 பந்தில் டக் அவுட் ஆனார், இவரோடு சேர்ந்து லிதன் தாஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது பங்களாதேஷ். அணியின் கேப்டன் ஷக்கிப்புடன் ஜோடி சேர்ந்த சாண்டோ சிறந்த முறையில் விளையாடினார்.
நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர், இவர்களது இணை 54 ரன்கள் சேர்த்ததால் அணியின் ஸ்கோர் நிலையானது. 23 ரன்னில் ஷக்கிப் அவுட்டாகிய பின்னர், அபிப் சிறிது ரன் சேர்த்தார், இவர்களோடு இனைந்து ஆடிய சாண்டோ 55 பந்தில் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் பங்களாதேஷ் 150 ரன்களுக்கு முதல் இன்னினசை நிறைவு செய்தது.
ஜிம்பாப்வே அணியில் கரவா, முசாரபனி தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர். வெற்றி இலக்கை நோக்கி பேட் செய்த ஜிம்பாப்வே அணி தொடக்கத்திலே சரிய தொடங்கியது. அணியின் முன் வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கில் அவுட் ஆகினார். வில்லியம்ஸ் மட்டும் நிழலைது ஆடி அணியை நிலைமையை சரி செய்தார்.
ஆனாலும் மறு முனையில் வீரர்கள் வரிசையாக அவுட்டாகியதால் மேலும் சிக்கல் உருவானது. முக்கிய வீரர் ரசா டக் அவுட் ஆனார். ரயன், வில்லியம்ஸ் ஜோடி நிதானமாக ஆட சிறிது நம்பிக்கை இருந்தது. இருவரும் இனைந்து 69 ரன்கள் சேர்த்தனர். போட்டியின் இறுதி கட்டமான 19 வது ஓவரில் வில்லியம்ஸ் அவுட்டாக ஆட்டம் திசைமாறியது.
இறுதி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பங்காளதேஷ் ஹொசேன் சிறப்பாக பந்து வீசினார் இதனால் ஜிம்பாப்வே 12 ரன்கள் மட்டுமே குவித்து 3 ரன்களில் தோல்வியை தழுவியது. அருமையான பந்து வீச்சால் அந்த அணியின் டஸ்கின் மூன்று முக்கிய விக்கெட்டை கைப்பற்றியது அணியின் வெற்றிக்கு உருதுணையானது . இந்த வெற்றியால் பங்களாதேஷ் மொத்தம் 4 புள்ளிகள் பெற்று குரூப் 2 இல் 2 டாம் இடம் பிடித்துள்ளது.