இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து அக்ஷயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் தான் வெளியேற போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது
விசித்ராவின் MeToo சர்ச்சை முதல் மாயா-பூர்ணிமாவின் மைக் நாடகம் வரை, கடந்த ஒரு வாரத்தில் நடந்த முக்கிய விஷயங்கள் பற்றி கமல்ஹாசன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த வாரம் ஏவிக்ஷனுக்கு விஜே அர்ச்சனா, விசித்ரா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, மாயா கிருஷ்ணன், மணிச்சந்திரா, ஆர்ஜே பிராவோ ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
unofficial poll-ல் vote செய்து பார்க்கும் பொழுது அதில் வரும் ரிசல்ட்தின் படி அக்ஷயா மற்றும் பூர்ணிமாவுக்கு தான் வெறும் 6% வாக்குகள் கிடைத்துள்ளது. விசித்ரா மற்றும் அர்ச்சனாவிற்கு தான் மிகவும் அதிக அளவில் ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. மாயா, ரவீனா, மணி, பிராவோ ஆகியோருக்கு ஓரளவுக்கு ஓட்டுகள் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
பூர்ணிமா மற்றும் அக்ஷயாவிற்கு தான் மிகவும் கம்மியான ஓட்டுகள் கிடைத்துள்ளது என்றும், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்றும் கூறப்படும் நிலையில் தான் பூர்ணிமா மற்றும் அக்ஷயா இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்று தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு பூகம்பத்தை பற்றி பூர்ணிமா பேசியிருந்தார். அதனைப் பார்த்து பூர்ணிமா உண்மையாகவே ஒரு இன்ஸ்பையரிங் women (பெண்) என்று பலரும் பேசியிருந்தார்கள். இப்படிபட்ட ஒருவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற போகிறார் என்பதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது.
ஆனாலும், இதன் பிறகு பூர்ணிமாவுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் என்னதான் பூர்ணிமா பழைய விஷயங்களை மறந்து விட்டு அர்ச்சனாவுடன் எதார்த்தமாக பழகினாலும் அவருடைய செயல் கொஞ்சம் நம்பகத்தன்மை இல்லாமல் தான் உள்ளது என்றும் கூறுகின்றனர்.
இதனால் தான் பூர்ணிமாவுக்கு மிகவும் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது என்றும், மற்றும் அக்ஷயா இதுவரையிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் கவனிக்கத்தக்க வகையில் எதுவும் செய்யவில்லை என்பதால் அவருக்கும் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.