உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான letterboxd தளம் வெளியிட்ட பட்டியலின்படி 2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்களில் தமிழில் வெளிவந்த “கடைசி விவசாயி ” திரைப்படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான letterboxd தளம் வெளியிட்ட பட்டியலின்படி 2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்களில் தமிழில் வெளிவந்த "கடைசி விவசாயி " திரைப்படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.#KadaisiVivasayi #VIKRAM #RRRMovie @VijaySethuOffl pic.twitter.com/4t2yQJIAA3
— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) July 5, 2022
letterboxd என்ற இணையதளம், உலக திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த உலக திரைப்படங்களின் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’கடைசி விவசாயி’ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், ராம்சரன் ஜூனியர் எண்டிஆர் நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற RRR, நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் ஹிட்டான விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.