மத்திய பிரதேசம் மாநிலத்தை போபாலை (Bhopal) சேர்ந்த 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் மூன்றாவதாக 49 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலின் (Bhopal) இத்வாரா பகுதியை சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயதான இவர் சுதந்திரப் போராட்ட வீராவார்.
முதலில் மகாராஷ்டிரா, நாசிக் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமாகி சில ஆண்டுகளில் அவரது மனைவி உயிரிழந்துவிடார்.
இதனைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம், லக்னோவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரும் உயிரிழந்துள்ளார்.
இப்படி இவருடைய முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி காலமான நிலையில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து தனக்கு ஆறுதலாக, அன்புடன் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்து வந்த அவர்,
தன்னை கவனித்து கொள்வதற்கும், தனக்கு துணையாக இருப்பதற்கும் 3வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன் படி பிரோஸ் ஜகான் என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். 49 வயதான ஃபிரோஸ் ஜஹானுக்கு இது இரண்டாவது திருமணம். கணவர் காலமான நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : Madurai aiims -சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
இவர்களது திருமணம் நடந்து ஓராண்டாகிய நிலையில் தற்போது அவர்களுடைய திருமணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அவர் தனது புது மனைவியை திருமணம் முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துஏற்றிக்கொண்டு செல்வதும் பலர், அந்த முதியவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்து தெரிவிப்பதுமாக இருந்தனர்.
மேலும், மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட ஹபிப் நாசருக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த திருமணம் குறித்து ஃபிரோஸ் ஜஹான் கூறுகையில், கணவர் ஹபீப் நாசர் நலமுடன் இருக்கிறார். எந்த வித மருத்துவ பிரச்சினையும் இல்லை.
இவரை திருமணம் செய்து கொள்ள தன்னை யாரும் வற்புறுத்தவில்லை. தானாக விரும்பியே அவரை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.