அபிஷேக் ராஜா தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக அவரது மனைவி தீபா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்களது வாழ்க்கையில் நடைபெற்ற சோகங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் அபிஷேக்கும் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து பேசினார்.
அதில், நான் திருமணம் செய்ததால் ஒரு தவறான ஆளாக இருந்தேன் என்றும், அதனால் என் அப்பாவையும் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் தனக்கு விவாகரத்து ஆனதை அவர் சொல்லவில்லை. இந்நிலையில் அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா, சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறிய விஷயங்கள் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், அபிஷேக், தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், ஒருமுறை அடிப்பதற்கு அனுமதியளித்துவிட்டால், அதன்பிறகு தொடர்ந்து அடித்து சித்ரவதை செய்வார். அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் அடிவாங்கும் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்வதே சரியான வழி என முடிவெடுத்தேன் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.