“சின்ன வயசுலேயே பொயிட்டாங்களே..” – `மெட்டி ஒலி’ நடிகை திடீர் மரணம்.. -அதிர்ச்சியில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகபெரிய வெற்றி பெற்ற சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. நிறைய சாதனைகளை படைத்த  இந்த சீரியல் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

பல வருடங்கள் கழித்து மீண்டும் கொரோனா காலத்தில் ஒளிபரப்பும் அளவிற்கு இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது. `மெட்டி ஒலி’ சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் திருமுருகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை உமா மகேஸ்வரி உயிரிழந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உமா மகேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது, அவருக்கு வயது 40.

‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார் உமா மகேஸ்வரி.

அவரின் மரண செய்தி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது.

 

Total
0
Shares
Related Posts