பிக் பாஸ் பிரபலம் ஆரவ் தங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
தொழிலதிபரும், மாடலுமான ஆரவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை தட்டிச் சென்றார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான ராஹேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
இது குறித்து ஆரவ் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் விலைமதிப்பில்லா குட்டி இளவரசியை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது, எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் வெடிக்கின்றன. அவள் ஏற்கனவே எங்கள் வாழ்க்கையை சிரிப்பு மற்றும் முடிவற்ற அரவணைப்புகளால் நிரப்பியுள்ளதால் எங்கள் குடும்பம் முழுமை அடைந்ததாக உணர்கிறோம்.
மேலும் எண்களின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். எங்களுடைய பெண் குழந்தையுடன் இந்த அழகான பயணத்தை துவங்கியுள்ளோம். உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.