பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள மேடை நாடக நடிகை – யார் இந்த மாயா எஸ் கிருஷ்ணன்?

மேடை நாடகக் கலைஞரான மாயா எஸ் கிருஷ்ணன், ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ படத்தில் நடிப்பைத் தொடங்கி ‘மகளிர் மட்டும்’, ‘வேலைக்காரன்’, ‘எந்திரன் 2.0’ உட்பட பல படங்களில் நடித்து விட்டு தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல நடிகர் நடிகைகள் தொடர்ச்சியாக போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், கமல்ஹாசன் அவர்களுடன் விக்ரம் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை மாயா எஸ் கிருஷ்ணன், தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு போட்டியாளராக சென்றுள்ளார்.

ஒரு “Hospital Clown” ஆக மருத்துவமனைகளில் குழந்தைகள் பிரிவில் அவர்களை மகிழ்த்தும், ஒரு சிறந்த மேடை கலைஞராகவும், வெள்ளித்திரை நடிகையாகவும் முன்னேறி வந்தவர் தான் மாயா எஸ் கிருஷ்ணன். இவர், திரைத்துறையில் கால் பதிக்கும் முன்னரே பல மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வசந்தன் இயக்கதில் வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிப்பில் வெளியான எந்திரன் 2.0 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் 4 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்தார். விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக இவர் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல், தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரதில் நடித்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே தான் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளார் மாயா எஸ் கிருஷ்ணன். இவரின் ஆட்டத்தை பொறுத்திருந்து பார்க்கலாம்..

Total
0
Shares
Related Posts