”ஹிஜாப்பை கழட்டுங்க..” பெண் மருத்துவருக்கு பாஜக நிர்வாகி கொலை மிரட்டல்!!

திருப்பூண்டி அருகே அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த மருத்துவரை ஹிஜாப்புக்கு பதிலாக மருத்துவ சீருடைய அணிய சொல்லி வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இரவு நேர பெண் ஊழியர் ஒருவர் மருத்துவ சீருடை அணியாமல் ஹிஜாப்பு அணிந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர் பணியில் ஹிஜாப் அணிந்திருந்த பெண் மருத்துவரை நீங்க டியூட்டில இருக்கீங்க .. உங்க யுனிஃபார்ம் எங்க ..நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க.. இவர் டாக்டர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு.. என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பாஜக நிர்வாகி புவனேஸ்வர ராம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Total
0
Shares
Related Posts