அரசு அதிகாரிகள் சிறுபான்மை மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளியது தொடர்பாக ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார்.
கடந்த 16 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது கலவரம் ஏற்பட்டது. ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலம் சென்ற இந்துத்துவ அமைப்பினர், வெறுப்பு கோஷங்கள் எழுப்பி மசூதிக்குள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களும் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் கலவரம் வெடித்தது. இந்த நிலையில் கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல், எதிர் தாக்குதல் நடத்திய 23-க்கும் மேற்பட்டஇஸ்லாமியர்களை கைது செய்தும்,அவர்களின், வீடு, கடைகளை அரசு அதிகாரிகள் புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளினர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“இது இந்தியாவின் அரசியலமைப்பின் விழுமியங்களை சிதைக்கும் செயலாகும். இதுதான் அரசின் ஏழை மற்றும் சிறுபான்மை மக்களை குறிவைப்பது என தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவினர் தனது இதயத்தில் உள்ள வெறுப்புகளை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளுங்கள்’’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
This is a demolition of India’s constitutional values.
This is state-sponsored targeting of poor & minorities.
BJP must bulldoze the hatred in their hearts instead. pic.twitter.com/ucSJK9OD9g
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2022