BJP National Council meet | 2-ஜி, 3-ஜி வரிசையில் 5-ஜி வரை இந்தியா கூட்டணிகள் தங்களது வாரிசுகளை பதவிக்கு கொண்டு வர பாடுபடுவதாக அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் பிப் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இந்த கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.இதில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும்,
பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக தீர்மானங்கள்:
அப்போது, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகளை கண்டித்து பாஜக சார்பில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது.
இதையும் படிங்க :BJP National Council meeting | டெல்லியில் இன்று தொடங்குகிறது..!
மேலும், திமுக, காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் அயோத்தி ராமர் கோயில் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாகவும் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சனாதனத்தை டெங்கு உள்ளிட்ட நோயுடன் திமுக ஒப்பிட்டு பேசிய போது, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜக, இந்தியர்களின் அடிப்படை நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில்
திமுக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும் தீர்மானம் வாயிலாக குற்றம்சாட்டியுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு:
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி நாட்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் காங்கிரசில் ராகுல் காந்தியை பிரதமராக்க சோனியா காந்தி முயற்சிப்பதாகவும், திமுகவில் உதயநிதியை முதலமைச்சராக்க மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1759449411493732816?s=20
இதேபோன்று, மேற்கு வங்கத்தில் தனது மருமகனுக்கு பதவி வழங்க மம்தா பானர்ஜியும், பிகாரில் லாலு பிரசாத், உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங், மகாராஷ்டிராவில் சரத் பவார்,
உத்தவ் தாக்கரே ஆகியோர் தங்களது வாரிசை முதலமைச்சராக்க துடிப்பதாக அமித் ஷா சாடினார்.
மேலும், 2-ஜி, 3-ஜி வரிசையில் 5-ஜி வரை இந்தியா கூட்டணிகள் தங்களது வாரிசுகளை பதவிக்கு கொண்டு வர பாடுபடுவதாகவும் கூறினார்.
ஜி என்பது அலைக்கற்றை இல்லை Generation எனவும் குறிப்பிட்டு கூட்டத்தில் சிரிப்பலையை (BJP National Council meet)ஏற்படுத்தினார்.