மதுரையில் பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி திமுகவினருக்கு எதிராக பாஜக மாமன்ற உறுப்பினர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுகவினருக்கும் இடையே வெளிப்படையாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் ஆளுநர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்நிலையில், ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக – பாஜக இடையேயான இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்த்தில் புயலை கிளப்பியுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சார்பி சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது. அதில் பாரதியார் கவிதை “அக்கினி குஞ்சொன்று கண்டேன்” என ஆளுநர் ரவியையும் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! (தமிழகம்) வெந்து தனிந்தது காடு( திராவிடம்) தழல் வீரத்தில் குஞ்சென்று முன்பென்றும் உண்டோ?
தத்தரிகெட தத்தரிகிடதித்தோம் என குறிப்பிட்டு ஒரு பக்கம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி புகைப்படமும் மற்றொரு பக்கம் பிரதமர் மோடி, அண்ணாமலை புகைப்படத்தை வைத்துள்ளனர். இந்த போஸ்டர் அனைவரின் கவனம் பெற்று வருகிறது.