Black Cumin : பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வரும் கருஞ்சீரகத்தை, நாம் அன்றாடம் உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம்.
கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது.
இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்களும் அதிகளவில் உள்ளன.
பெண்கள் பிரசவத்திற்கு பிறகு வயிறு இறுக்கம் அடைய கருஞ்சீரகப்பொடியை கஞ்சியுடனோ, தேனுடனோ கலந்து சாப்பிடலாம்.
இதையும் படிங்க : May 4 Gold Rate : சற்று குறைந்தது தங்கம் விலை!
அதுமட்டுமல்லாமல் கருஞ்சீரகப் பொடியை உணவில் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். வயிறு உப்புசம் குறையும்.
மோருடன் கலந்து சாப்பிட்டால் பசியைத் தூண்டும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கால் லிட்டர் நல்லெண்ணெயுடன் கால் கப் கருஞ்சீரகத்தை சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்கலாம்.
அதேபோல் தினமும் இருவேளை கருஞ்சீரகப் பொடியைத் தேனுடன் கலந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்.
பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் முகப்பரு, அதனால் ஏற்பட்ட தழும்பு மறைய கருஞ்சீரகப் பொடியை தண்ணீருடனோ அல்லது எலுமிச்சைச் சாறுடனோ கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிந்த நீரில் கழுவி வந்தால் முகப்பரு நீங்கி முகம் பளிச்சிடும்.
உடல் பருமன் உள்ளவர்கள் கருஞ்சீரகப் பொடியுடன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து வெந்நீரில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் குறையும்.
வெள்ளைப்பூண்டு சாறுடன் தேன் கலந்து, கருஞ்சீரகப் பொடியையும் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும்.
அதுமட்டுமல்லாமல் மறதி, மன அழுத்தத்தையும் குணப்படுத்தும். பெண்கள் கர்ப்பப்பைக் கோளாறுகள், மாதவிடாய் பிரச்னைக்கு கருஞ்சீரகப் பொடியைத் தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த திரிபலாசூரணம், கருஞ்சீரகப்பொடி, மஞ்சள்தூள், வெந்தயம் கலந்து சாப்பிட்டு வரலாம்.
பற்களின் வலிமைக்கு உதவுகிறது. சிறிது கருஞ்சீரக எண்ணெய்யை நெற்றியில் தடவ, தலைவலி குணமாகும் Black Cumin.
இதையும் படிங்க : சமையலறையில் அரிசியை எங்கு வைத்தால் செல்வம் சேரும் தெரியுமா?