போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
சொகுசு கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆர்யன் கான் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோக்தகி ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை எனவும் அவர் போதை பொருளை பயன்படுத்தவில்லைவும் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சாம்ப்ரே, நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
21 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.