ஹைதராபாத்தில் புஷ்பா – 2 திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்துள்ளதாக அதிர்த்தி தகவல் வெளியாகி உள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று முதல் காட்சியைக் காண திரையரங்கம் சென்ற அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் தெலங்கானாவில் வைத்து போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த நிலையில் தற்போது அவர் இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ளார் .
கடந்த 4 ஆம் தேதி நடந்த இந்த துரதிஷ்டவசமாக சம்பவத்தில் தாய் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஸ்ரீதேஜ் காயமடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார் .
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன் வந்ததில் கூட்ட நெரிசலில் ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே கைதாகி ஜாமினில் விடுதலையான நிலையில் அல்லு அரிஜூனின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி தெலங்கானா போலீசார் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.